CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்
உங்களுக்கான CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்துவது எப்படி
1: go.gov.sg/cdcv இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் 2025 (ஜனவரி) என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.
2: சிங்பாஸ் (Singpass) வழி புகுபதிவு செய்யுங்கள். ஒரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் மட்டும் இவ்வாறு செய்தால் போதும்.
3: உங்களுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளின் இணைப்பை gov.sg அனுப்பி வைக்கும் குறுஞ்செய்தி வழி பெற்றுக்கொள்ளுங்கள். பற்றுச்சீட்டுகளைக் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள குறுஞ்செய்தியை அவர்களுக்கு அனுப்புங்கள்.
4: நீங்கள் பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டின் வகையையும் தொகையையும் தெரிவுசெயுங்கள். பங்குபெறும் வணிகரிடம் QR குறியீட்டைக் காட்டுங்கள்.
பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2025 வரை செல்லுபடியாகும்.
உங்களிடம் திறன்பேசி அல்லது சிங்பாஸ் (Singpass) கணக்கு இல்லாவிட்டால் அல்லது மேற்கொண்டு விவரமும் உதவியும் தேவைப்பட்டால் உங்களுக்கு அருகிலுள்ள சமூக நிலையத்திற்கு/ மன்றத்திற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) செல்லுங்கள்.
தொலைபேசி: 6225 5322
*படங்கள் விளக்கத்திற்கு மட்டுமே