CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்
உங்களுக்கான CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது எப்படி
1: go.gov.sg/cdcv இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
2023ஆம் ஆண்டுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் மீது தட்டுங்கள்.
2: சிங்பாஸ் (Singpass) கணக்கைப் பயன்படுத்தி உட்பதிவு செய்யுங்கள். ஒரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் மட்டும் இதைச் செய்தால் போதும்.
3: உங்களுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளின் இணைப்பைக் குறுந்தகவல் (SMS) மூலம் பெறுங்கள். பற்றுச்சீட்டுகளைக் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள குறுந்தகவலை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்களுக்கான CDC பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவது எப்படி
1: நீங்கள் பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்.
2: நீங்கள் செலவு செய்ய விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுங்கள். பிறகு ‘பற்றுச்சீட்டைக் காட்டுங்கள்’ என்பதைத் தட்டுங்கள்.
3: கடைக்காரரிடம் QR குறியீட்டைக் காட்டுங்கள். அவர் குறியீட்டை ஸ்கேன் செய்து பரிவர்த்தனையை நிறைவு செய்வார்.
பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2023 வரை செல்லுபடியாகும்.
உங்களிடம் திறன்பேசி அல்லது சிங்பாஸ் (Singpass) கணக்கு இல்லாவிட்டால் அல்லது மேற்கொண்டு விவரமும் உதவியும் தேவைப்பட்டால் உங்களுக்கு அருகிலுள்ள சமூக நிலையத்திற்கு/ மன்றத்திற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) செல்லுங்கள்.
தொலைபேசி: 6225 5322
*படங்கள் விளக்கத்திற்கு மட்டுமே